ஈரோட்டில் உள்ள சமூக நீதி விடுதியில், அமைச்சர் சம்பத்குமார் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, விடுதியின் தற்போதைய வசதிகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
விடுதியின் செயல்பாடு களை ஆய்வு செய்த அமைச்சர், கீழ்க்கண்ட முக்கிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்:
விடுதியில் காலா வதியான மருந்துகளை உடனடியாக அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய மருந்துகளை இருப்பு வைக்க உத்தரவிட்டார். மாணவர்களின் கல்வி மற்றும் இதர உபகரணத் தேவைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை தடையின்றி வழங்கப் படுவதை அவர் உறுதி செய்தார். அரசுத் திட்டங் களின்படி, விடுதியில் கழிப்பறைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு வசதிக்காக சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப் படும் என்று தெரிவித்தார்.
விடுதியில் உள்ள பணியாளர் பற்றாக் குறையைப் போக்கவும், நிர்வாகச் செயல் பாடு களைச் சீரமைக்கவும் நட வடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.



