நீலகிரி மாவட்டம், கேத்தியில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியும், வெலிங்டனில் அமைந்துள்ள மெட்ராஸ் ராணுவ பயிற்சி மையமும் (MRC) வரலாற் றுச் சிறப்புமிக்க புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டன.
இந்த புதிய ஒப்பந்தத் தின் மூலம், தொழில்நுட்பக் கல்வியுடன் ராணுவ தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் தேசிய சேவை மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் பல் வேறு பயிற்சி மற்றும் கல்வி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.
ஒப்பந்தத்தில், சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி இயக்குநர் டாக்டர் சி.டி. அருமைராஜ் மற்றும் மெட்ராஸ் ராணுவ பயிற்சி மைய கமாண்டன்ட் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில், கோவை மறைமாவட்ட ஆயர் எஸ். பிரின்ஸ் காட்வின், மெட்ராஸ் ராணுவ பயிற்சி மைய பிரிகேடியர் கிருஷ்ண தாஸ், கல்லூரி செயலாளர் டேவிட் பர்ணபாஸ், பொருளாளர் அமிர்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



