பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஹேக்கத்தான் முதல் கட்டப் போட்டியில் நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் சிறப்பாக செயல்பட்ட ஆறு அணிகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டு அணிகளும் இடம்பெற் றன. அண்மையில் குன்னூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குப்பைகளை தானியங்கி முறையில் தரம் பிரிக்கும் திட்டத்தை மாணவிகள் உருவாக்கி வழங்கினர். இந்தத் திட்டம் தேசிய அளவில் முதலிடம் பெற்று, திட்டத்தை செயல்படுத்த ரூ.1 லட்சம் நிதியுதவியையும் பெற்றது.
சாதனை படைத்த மாணவி களை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் கி. சித்ரா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



