fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு வார விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு வார விழா கொண்டாட்டம்

இந்திய கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறை வடைந்ததை முன்னிட்டு நாடு முழுவதும் 29.06.2026 முதல் 06.07.2026 வரை கூட்டுறவு வாரம் 2026 விழா சிறப்பாக கொண்டா டப்படுகிறது .
இதையொட்டி திருப்பூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியான பெரு மாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சங்கங்கள் கணினி மய மாக்கல் மற்றும் டிஜிட்டல் கூட்டுறவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கல் ணிஸிறி மற்றும் டிஜிட்டல் சேவைகள் குறித்து உறுப் பினர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். கே சி சி மற்றும் மைக்ரோ ஏடிஎம் குறித்து சாமிநாதன் மற்றும் குணசேகரன் விளக்க உரையாற்றினார்கள்.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் து.கண்ணன், சங்கத்தின் செயலாட்சியர் கோகுல ராஜா ஆகியோர் வரவேற்பு ரையாற்றினார்கள் மேலும் சங்க உறுப்பினர்கள், விவ சாயிகள் சங்கப் பணியா ளர்கள் பலரும் கலந்து கொண்டனர். சங்கத்தின் செயலாளர் பாலாமணி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img