இந்தியாவின் பல் வேறு நகரங்களில் அதி நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சையை அப்போலோ மருத்துவமனை வழங்கி வருகிறது. இதில் நடுத்தர மற்றும் கிராமப் பகுதியில் இருந்து அதிகப்படியான நோயாளிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக வருவதால் நடுத்தர நகர பகுதிகளில் தற்போது விரிவான சேவைகளை அப்பல்லோ மருத்துவமனை வழங்கி வருகிறது.
இதன் அடிப்படையில் கரூரில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அப்போலோ மருத்துவமனையில் கூடுதலாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ரூபாய் 5 கோடி மதிப்பிலான Siemens Artis one edition x cath lab – இன்று வி.என்.சி. குழுமத்தின் தலைவர் விஎன்சி பாஸ்கர் குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவ மனை நிர்வாக தலைவர் டாக்டர் ஸ்ரீதர், இதய நோய் நிபுணர் டாக்டர் கேசவன், மருத்துவமனை பொது மேலாளர் கற்பகவள்ளி, நரம்பியல் நிபுணர் மருத்துவர் தமிழ் ஆனந்த் உள்ளிட்ட மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே இந்த மருத்துவமனையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 4000க்கும் மேற்பட்ட கரோனரி ஆஞ்சி யோகி ராம்கள், 4500க்கும் மேற்பட்ட கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி, 50க்கும் மேற்பட்ட தற்காலிக டாஸ்மாக்கள் சிகிச்சைகளும், மேலும் பலூன் மைட்ரல் வால்வோட்டமி உள்ளிட்ட மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் வேலையில், தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக தரத்திலான அதிநவீன கருவி மூலம் இதயம் தொடர்பான நோய்களை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான கதிர்வீச்சு பாதிப்பை மிக கணிசமாக குறைக்கும், மேம்பட்ட மிகத் தெளிவான படங்களை எடுக்க இயலும் எனவும், துல்லியமாக ஸ்டென்ட் பொருத்துவதையும், அதனை நேரடியாக காணஇயலும் எனவும் இதய நோய் நிபுணர் கேசவன் விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து மூளையில் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு போன்றவற்றை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்கவும் இந்த கருவி உகந்ததாக இருப்பதாக நரம்பியல் நிபுணர் தமிழ் ஆனந்த் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக விஎன்சி பாஸ்கர் பேசும்போது, கரூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அப்போலோ மருத்துவமனையின் இந்த அரியவாய்ப்பை பயன்படுத்தி தங்களது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டு கோள்விடுத்தார்.



