fbpx
Homeபிற செய்திகள்பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட தொடக்க விழா- திருப்பூர் மண்டல கமிஷனர்...

பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட தொடக்க விழா- திருப்பூர் மண்டல கமிஷனர் தகவல்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) சார்பில், பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட தொடக்க விழா மற்றும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூன் 19ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூர் மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் அபிஷேக ரஞ்சன் கூறியதாவது:

திருப்பூர் காந்திநகரில் உள்ள ஏ.வி.பி., சீனியர் மேல்நிலைப் பள்ளியில் மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும். டெல்லி விஞ்ஞான் பவனில் பிரதமர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியுடன் இணைந்து, நாடு முழுவதும் 200 இடங்களில் உள்ளூர் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் தகுதியான பயனாளிகளுக்கு திட்ட நலன்கள் வழங்கப்படுவதுடன், திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் அம்சங்கள் குறித்து தொழில் நிறுவனங்கள், வேலையளிப்பவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விளக்கமளிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img