fbpx
Homeபிற செய்திகள்போச்சம்பள்ளி ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

போச்சம்பள்ளி ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட, போச்சம்பள்ளி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ரூ.5 கோடியே 86 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட, போச்சம்பள்ளி ஊராட்சி, கோணனூர், பழனி ஆண்டவர் நகரில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத் தின் கீழ், ரூ.3 கோடி மதிப்பில் கட்டப் பட்டு வரும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் செங்கல், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார்.

இந்த முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்களில் நிர்வாக அலுவலகம், கால்பந்து, கை பந்து, கோ கோ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கபடி, ஓட்டப்பந்தய மைதானம் ஆகிய மைதானங்கள், பார்வை யாளர்கள் அமருவதற்கான கேலரி, முன் நுழைவு வாயில், சுற்றுச்சுவர், குடிநீர் சுத்திகரிப்பு மையம், மெடல் போடியம், மைதானத்தை சுற்றி சோலார் மின் விளக்குகள், மின் வசதி கள், ஆழ்துளை கிணறுகள் அமைக் கப்பட உள்ளது.
தொடர்ந்து, போச்சம்பள்ளி ஊராட்சி, கோணனூர், பழனி ஆண்டவர் நகரில், ஒருங்கி ணைக்கப்பட்ட ஒதுக்கீடு வருவாய் திட்டத்தின் கீழ் (SCPAR) ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள எல்.பி.ஜி. நவீன எரிவாயு தகன மேடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மீதமுள்ள பணி களை விரைந்து முடித்து பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, காவேரிப்பட்டி ணம் போச்சம்பள்ளி சாலை முதல் ஜம்புகுட்டபள்ளி வரை நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.35 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலும், போச்சம்பள்ளி கல்லாவி சாலை முதல் மடத்தனூர் வரை, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.40 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு, சாலையின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் சாலைப்பணிகளை தரமாகவும், விரைந்தும் முடித்து பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, காட்டாகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டு, இவ்வலுவலகத்தில் பராமரிக்கப்படும் வரி வசூல் மற்றம் நிதி தொடர் பான பதிவேடுகள், நிர்வாகப் பதிவேடுகள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகள், தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், காட்டாகரம் நியாய விலைக்கடையை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்நியாய விலைக் கடையில் அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சரியான எடையில், தரமாக வழங்கப்படுவதை ஆய்வு செய்தார்.

மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாகவும், சரியான எடையுடன் வழங்கப்பட வேண்டும் என நியாய விலைக் கடை ஊழியருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, துணை ஆட்சியர் (பயிற்சி) சாய்சைதன்யா ஜாதவ், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மோகன சுந்தரம், உதவி செயற்பொறியாளர் ஜெகதீஷ் குமார், வட்டாட்சியர் அருள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img