கோவை மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் கட் டாரவி தேஜா தெரிவித்தார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தென்மேற்கு பருவ மழை யினால் பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மாநக ராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், சாலைகளில் தேங்கும் மழைநீரினை விரைவாக வெளியேற்றும் வகையிலும், ரயில் நிலையம், லங்கா கார்னர் ஆகிய பகுதிகளில் 21 எச்பி திறன் மற்றும் 20 எச்பி திறன் கொண்ட 2 மின் மோட்டார்களும், அவிநாசி மேம்பாலம் அருகில் 28 எச்பி திறன், 30 எச்பி திறன், 12.5 எச்பி திறன், 25 எச்பி திறன், 25 எச்பி திறன் கொண்ட 5 எண்ணிக்கையிலான மின்மோட்டார்களும், 184 கிலோ வாட் திறன் கொண்ட என்ஜின் ஜெனரேட்டரும், கிக்கானி பள்ளி அருகில் 28 எச்பி திறன், 20 எச்பி மற்றும் 7.5 எச்பி திறன் கொண்ட 3 எண்ணிக்கையிலான மின்மோட்டார்களும் மற்றும் காளீஸ்வரா மில் அருகில், 36 எச்பி திறன், 21 எச்பி திறன். 21 எச்பி திறன் கொண்ட 3 மின்மோட்டார்களும், 125 ரிகீ திறன் கொண்ட என்ஜின் ஜெனரேட்டரரும் மற்றும் கூடுதல் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.
அதேபோன்று, சாலைகளில் மரம் மற்றும் மரக்கிளைகள் விழுந்தால் உடனடியாக அகற்றும் வகையில் கூடுதலான மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் கூடுதலான மாநகராட்சி பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் மாநகராட்சியின் சார்பில் தூர்வாரப்பட்டுள்ளது.
இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா தெரிவித்தார்.



