fbpx
Homeபிற செய்திகள்கோவை அருகே அரசு பள்ளிகளில் சுனில் ஆனந்த் எம்எல்ஏ ஆய்வு

கோவை அருகே அரசு பள்ளிகளில் சுனில் ஆனந்த் எம்எல்ஏ ஆய்வு

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் எம்எல்ஏ சுனில் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த குடிநீர் தொட்டியினை சரிசெய்ய உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் மேற்கொண்ட ஆய்வின் போது பள்ளியில் பயன்பாட்டில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூண்கள் பழுதடைந்து தூணின் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருந்தது. இதையடுத்து அசம்பாவிதம் நடக்கும் முன்பாக சேதமடைந்த குடிநீர் தொட்டியினை உடனடியாக சரிசெய்ய நகராட்சி ஆணையர் மூவேந்திரனுக்கு சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் அறிவுறுத்தினார்.

அதேபோல் திருமலை நாயக்கன்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சுனில் ஆனந்த் எம்எல்ஏ பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்திருப்பதை பார்த்து அதை சரி செய்து பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது 6 வது வார்டு விஜயா நகர் பகுதியில் சாலை அமைத்துக்கொடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்திடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் விரைவில் சாலை அமைத்துத் தருவதாக உறுதியளித்தார்.

ஆய்வின் போது தமிழக வெற்றிக் கழக கூடலூர் நகரச் செயலாளர் சத்யகுமார், நகர நிவாகிகள் சரவணன், ஷகிலா, பூர்ணிமா, விஜய், விக்னேஷ், வெங்கடேஷ், கவுசிக், மவுரி, அஜித் உள்பட பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img