பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா திருவெறும்பூர் கிளை, திருச்சி, காட்டூர், அம்மன் நகர், தஞ்சை ரோடு ஐடியல் டவர்ஸில் துவக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் ஸ்ரீநிதி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் எம்.ரவீந்திரன் குத்துவிளக்கேற்றினார். நிகழ்வில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கோவை துணை மண்டல மேலாளர் ராஜூ, மண்டல அலுவலக முதுநிலை மேலாளர் விக்னேஷ், கிளை மேலாளர் அருண் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



