சென்னை டி.ஏ.வி பள்ளியுடன் இணைவு பெற்ற சிதம்பரம் ஷெம் போர்டு சி.பி.எஸ்.இ பள்ளி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீத வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை டி.ஏ.வி பள்ளி குழுமத்துடன் இணைவு பெற்ற சிதம்பரம் ஷெம்போர்டு சி.பி.எஸ்.இ பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்தும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஐந்து ஆண்டுகள் தொடர்ச் சியாகவும், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. இதில் பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சி.ப்ரீத்தா 466 மதிப்பெண்களும், ஷைனி ஹர்ஷிதா 451 மதிப் பெண்களும், நித்திஷ் 435 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடங்களை பெற்றுள் ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 31 மாணவர்களில் 27 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
தமிழ் பாடத்தில் ஷைனி ஹர்ஷிதா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுவர்ஷினி 456 மதிப் பெண்களும், நர்மதா 427 மதிப்பெண்களும், யாஷினி 410 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற் றுள்ளனர்.
தேர்வு எழுதிய 25 மாணவர்களில் 21 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
பள்ளியில் சனிக்கிழமை நடை பெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளையும், வெற்றிக்கு அயராது உழைத்து வழிகாட்டிய முதல்வர் லதா உள் ளிட்ட அனைத்து ஆசிரியர்க ளையும், அலுவல் சார் பணியாளர்களையும், பள்ளியின் நிறுவனர் விஸ்வநாதன் மற்றும் பள்ளியின் தாளாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி மாணவர்களை கௌரவித்தனர்.



