இளையவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஹாக்கி சாம்பியன் சுகுணா கோப்பை 2026 போட்டி வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சுகுணா கோப்பை 2026 போட்டி கோவை ஆர்.எஸ் புரம் ஹாக்கி மைதானத்திலும் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை என மூன்று மைதானங்களில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை ஹாக்கி போட்டியானது நடைபெற உள்ளது.
தொடர்ந்து இறுதிப் போட்டியானது கோவை ஆர்.எஸ் புரம் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.

அதற்காக கோவை ஆர்.எஸ்புரத் தில் உள்ள ஹாக்கி மைதானத் தில் காலை மற்றும் மாலை என வீரர்கள் தீவிர பயிற்சி வருகின்றனர்.
இது குறித்து ஹாக்கி அசோசியேஷன் நிர்வாகிகள் கூறியதாவது:- இளையவர்களுக்கான இந்த ஹாக்கி போட்டியில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங் களை சேர்ந்த 35 அணிகளில் 700க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகள் மற்றும் வீரர்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



