புதுடெல்லியில் இயங்கிவரும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தொழில்நுட்பவியல் துறையானது பட்டப்படிப்பில் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தும் பொருட்டு “ஸ்டார் கல்லூரி திட்டம்“ (Star College Scheme) தொடங்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் செயல்பட்டு வரும் சிறந்த ஆய்வகம் மற்றும் வகுப்பு வசதிகள் கொண்ட அறிவியல் கல்லூரியினைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரூபாய் 70 இலட்சம் நிதி ஆதாரத்தினைக் கொடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் வருகின்ற கல்வியாண்டிற்காக நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறந்த கல்லூரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு செயல்பட்டு வரும் உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளின் கட்டமைப்பினை மேம்படுத்த நிதி ஆதாரத்தினை வழங்கி பெருமை சேர்த்துள்ளது.
ஸ்டார் கல்லூரி திட்டத்தின் மூலம் ரூபாய் 70 இலட்சம் நிதி உதவி பெறுவதற்கு உறுதுணையாக செயல்புரிந்த முதல்வர் முனைவர் எஸ். மனோகரன், உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் முனைவர் கே. அப்துல் மற்றும் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் டி. பரிமளம் மற்றும் மாணவர்களுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன், அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்களான திரு.எஸ்.நந்தகுமார் பிரதீப், திரு, எஸ்.திருமூர்த்தி மற்றும் நிர்வாக அலுவலர் முனைவர் வி.சி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.



