fbpx
Homeபிற செய்திகள்பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் டெக் டே 2026

பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் டெக் டே 2026

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, தனது வருடாந்திர முதன்மை நிகழ்வான ‘டெக் டே 2026’-ஐ, நடத்தவுள்ளது.

இந்த நிகழ்வில், கடந்த ஆண்டின் முக்கிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிறுவன மைல்கற்களை எடுத்துரைக்கும் விரிவான தொழில்நுட்ப தின அறிக்கை, முக்கிய நிகழ்வுகள் மற்றும் சாதனைகளின் காட்சிப் படைப்புடன் வழங்கப்படும்.

பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மின்-ஒளியியல் அமைப்புகளுக்கான ஆய்வகத்தின் (LEOS) இயக்குநர் டாக்டர் கே. வி. ஸ்ரீராம் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்வார்.

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி யின் முதல்வர் டாக்டர் கே.பிர காசன் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குவார்.

இந்நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர்கள், மற்றும் கல்வி, விளையாட்டு, இணைப் பாடச் செயல்பாடுகள், சமூக சேவை, தலைமைத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களைக் கௌரவிக்கும் விருது வழங்கும் விழா இடம்பெறும்.

இதில், சிறந்த வெளியேறும் மாணவருக்கான மதிப்புமிக்க ‘கூரத் தாழ்வார் விருதும்’ அடங்கும்.

படிக்க வேண்டும்

spot_img