பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா நிறுவனம், தனது சிறப்பு முதலீட்டு நிதிகளின் கீழ் முதல் திட்டமான ‘சபையர் ஈக்விட்டி லாங்-ஷார்ட் எஸ்ஐஎப்’ என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியை பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளில் நிப்டி 500-ல் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய பிராங்க்ளின் டெம்பிள்டன் திட்டமிட்டுள்ளது.
சபையர் ஈக்விட்டி லாங்-ஷார்ட் எஸ்ஐஎப்-ன் புதிய நிதி வெளியீடு, ஏப்ரல் 10, 2026 முதல் ஏப்ரல் 24, 2026 வரை முதலீட்டுக்காக திறந்திருக்கும்.
இந்த அறிமுகம் குறித்து பிராங்க்ளின் டெம்பிள்டன் – இந்தியாவின் தலைவர் அவினாஷ் சத்வலேகர் கூறியதாவது: அதிக ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்காக இந்த எஸ்ஐஎப் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஒப்பீட்டளவில் அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, வரிச் சலுகை கொண்டதாகவும் உள்ளது.
எங்கள் நிறுவனத்தின் பல ஆண்டு கால முதலீட்டு அனுபவத்தை இந்த சபையர் ஈக்விட்டி லாங்-ஷார்ட் எஸ்ஐஎப் பயன்படுத்துகிறது. லாங்-ஷார்ட் கட்டமைப்பின் மூலம் முதலீட்டு அபாயங்களைச் சிறப்பாக நிர்வகிக்கும் வகையில் எங்களின் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சபையர் ஈக்விட்டி லாங்-ஷார்ட் எஸ்ஐஎப் போர்ட்ஃபோலியோ மேலாளர் அரிஹந்த் ஜெயின், சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் வகையிலும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.



