திருப்பூர் சஹோதயா சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கிடையேயான 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான எறிபந்து போட்டி திருப்பூரில் அண்மையில் நடைபெற்றது.
கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைப்பெற்ற இப்போட்டியில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 30 பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் 30 அணிகளாக களம் இறங்கினார்கள்.
இவர்களுடன் கூரப்பாளையம் பிரிவில் இயங்கி வரும் நந்தா சென்ட்ரல் மெயின் பள்ளியினை சார்ந்த மாணவர்கள் போட்டிகளை எதிர்க் கொண்டார்கள். பல்வேறு சுற்றுகளை கடந்து இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றார்கள். இறுதிப் போட்டியின் முடிவில் இரண்டாம் இடத்தினை தக்க வைத்து பெருமை சேர்த்தார்கள்.
இரண்டாம் இடத்தினை தக்க வைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் சிறப்பு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்களான எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, பள்ளியின் நிர்வாக இயக்குனர் விதுஷா மூர்த்தி, முதல்வர் சாரா இப்ராஹிம், நிர்வாக அதிகாரி மனோகரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில் குமார், தயாநிதி ஆகியோர் மாணவிகளை பாராட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.



