fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 2026ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி சேர்பெர்சன் நந்தினி ரங்கசாமி தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.

கல்லூரி முதல்வர் ஹாரத்தி முன்னிலை வகித்தார்.

விழாவில் குஜராத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் எஸ்.சுந்தர் மனோகரன், முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான காலை அமர்வுக்குத் தலைமை தாங்கி பட்டங்கள் வழங்கி பேசினார்.

2-வது நிகழ்வாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரியின் செயலாளர் யசோதா தேவி வரவேற்று பேசினார்.

கல்லூரி இயக்குனர் சதாசிவம் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞானி மற்றும் மூத்த இயக்குநரான டாக்டர் ரஞ்சித் கிருஷ்ண பை அடிப்படை அறிவியல், சமூக அறிவியல், மானுடவியல் மற்றும் பி.வோக். பட்டப்படிப்பு மாணவர்களிடையே பட்டங்கள் வழங்கி உரை நிகழ்த்தினார். முன்னதாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் 3213 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img