மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பெராக் ஒகினவா கோஜி ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி சேத்தியாதோப்பு எஸ்.டி.சீயோன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டிக்கு பள்ளியின் முதல்வர் யுவான்சி பிரவின் தலைமை தாங்கினார்
உடற்கல்வி ஆசிரியர் அன்வந்த், கராத்தே பயிற்சியாளர் இளவரசன், ஷர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய் ரெங்கநாதன் அனை வரையும் வரவேற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சேராகுப்பம் எஸ்.டி சீயோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தாளாளர் பிரவீன் சாமுவேல் சிறப்புரையாற்றினார்.
இப்போட்டியில் வடலூர், சேத் தியாதோப்பு, சிதம்பரம், பரங் கிப்பேட்டை, பி.முட்லூர், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், ஆண்டி மடம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் பங்கு பெற்றனர்.
இப்போட்டி கட்டா மற்றும் சண்டை பிரிவுகளில் நடைபெற்றது.
போட்டியில் கராத்தே பயிற்சியாளர் சத்தியமூர்த்தி. பிருத்தியுனன், ராஜ்கிரண், முகுந்தன் மற்றும் ஆசிரியர்கள் அன்பு ராணி, முட்லூர் ஜெயப்பிரியா, அபிதா ஆகியோர் பங்கு பெற்றனர். விழா முடிவில் வீரு ஸ்போர்ட்ஸ் அகாடமி செயலாளர் ஷர்மா நன்றி கூறினார்.



