மருத்துவத் துறையில் டிஜிட்டல் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவை கேஎம்சிஹெச் மருத்து வமனை சார்பில் கோவை லீ மெரிடியன் ஹோட்ட லில் உயர்மட்டப் பயி லரங்கு நடைபெற்றது.
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP)” என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இது குறித்து கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனி சாமி பேசுகையில், (1) செயற்கை நுண்ணறிவை நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்துவது? (2) மருத்துவமனைகள் சந்திக்கும் சைபர் பாதுகாப்பு சவால்கள் என்ன? (3) விதிமீறல்களுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்க வாய்ப்புள்ள “டிஜிட்டல் தனிநபர்தரவு பாதுகாப்பு சட்டம்“ மருத்துவ நிறு வனங்கள் தற்போது எதிர்கொள்ளும் மூன்று முக்கிய சவால்களை இந்த பயிலரங்கு மையமாகக் கொண்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வு, வரும் ஏப்ரல் 10 முதல் 12 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள 10-வது ‘CAHOCON 2026’ மற்றும் தெற்காசியாவிற்கான முதல் ‘ISQua’ மண்டல மாநாட் டிற்கான அதிகாரப்பூர்வத் தொடக்கமாகும். இந்த மாநாடு “தொழில்நுட்பம், அக்கறை மற்றும் நம்பிக்கை – புதிய மருத்துவ விதிமுறை” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இதில் சுமார் 2,500-க்கும் மேற் பட்ட உலகளாவிய பிரதிநிதிகள் மற்றும் மருத்துவத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு னர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த பயிலரங்கில் துறைசார் வல்லுநர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்:
கேஎம்சிஹெச் கதிரி யக்கத் துறைத் தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் கதிரியக்கத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து விளக்கினார்.
கேஎம்சிஹெச் கதிர் வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆர். சுப்ரமணியம் புற்று நோய் சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு துல் லியத்தை மேம்படுத்துகிறது என்பது பற்றிப் பேசினார்.
கார்த்தி புருஷோத்த மன் (முதன்மை நிர்வாக அதிகாரி, 1 ஹேட் சொலூஷன்ஸ்), உலகளாவிய மருத்துவத் துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தி யாவின் முன்னணிப் பயணம் குறித்துப் பேசினார்.
பிஜு வேலாயுதன் (முதன்மை தகவல் அதிகாரி, குப்புசாமி நாயுடு மருத்துவமனை) நோயா ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் டிஜிட்டல் கருவிகளின் பங்கு குறித்து விளக்கினார்.
அருணாச்சலம் (இயக்குனர், நைன்த் டை மென்ஷன்), டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நோயாளிகளின் தரவை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து உரையாற்றினார்
ரவிசங்கர் (இயக்குனர், ஆயோஸ்டா இந்தியா), மருத்துவத் துறையில் அதிகரித்து வரும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் களை எதிர்கொள்வது குறித்து விளக்கினார்.
கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி பேசுகையில், மருத்துவத் துறையில் சிறந்து விளங்க செயற்கை நுண்ணறிவுவைப் பயன்ப டுத்துவது இனி ஒரு விருப்பம் அல்ல, அது ஒரு கட்டாயம் என்று குறிப்பிட்டார். கோவை மருத்துவப் புதுமைகளின் முக்கிய மையமாகத் திகழ்வதை இந்த முகாம் உறுதிப்படுத்துகிறது என்றார்.
இந்த நிகழ்வில் கேஎம் சிஹெச் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகு மரன் வரவேற்புரை ஆற்றினார். CAHOCON திட்ட நிர்வாகி ரபீனா நன்றியுரை வழங்கினார்.



