fbpx
Homeபிற செய்திகள்யமஹா மியூசிக் இந்தியாவின் பிராண்ட் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

யமஹா மியூசிக் இந்தியாவின் பிராண்ட் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

ஏ.ஆர்.ரஹ்மான், இந்திய இசையை சர்வதேச அரங்கில் உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானை பிராண்ட் தூதராக யமஹா மியூசிக் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யமமோட்டோ டகெதோஷி கூறுகையில், “ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்துள்ள இந்த கூட்டாண்மையின் மூலம், அடுத்த தலைமுறை இசைக்கலைஞர்களை ஊக்குவித்து, இந்தியா முழுவதும் கட்டமைக்கப்பட்ட இசைக் கல்வியை விரிவுபடுத்துவதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார்.

விற்பனை பிரிவு தலைவர் ரியோஜி மருயாமா, இசைக்கருவிகள் விற்பனையை தாண்டி எங்கள் நோக்கம், பயிற்சி முகாம்கள், பள்ளிகளுடன் இணைப்பு, மற்றும் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் இசைக் சமூகங்களை வளர்ப்பதில் உறுதியாக உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், “ இசைத் திறமையின் மேன்மையை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியத்துடன், ‘மேட் இன் இந்தியா’ முயற்சியின் மூலம் தரமான இசைக்கருவிகளை எளிதாகக் கிடைக்கச் செய்கின்ற இந்த நிறுவனத்துடன் இணைவதில் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img