fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஒரே இடத்தில் 10 வாக்குப்பதிவு மையங்கள் - ஆட்சியர் பவன்குமார் ஆய்வு

கோவையில் ஒரே இடத்தில் 10 வாக்குப்பதிவு மையங்கள் – ஆட்சியர் பவன்குமார் ஆய்வு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட செல்வபுரம் சிருஷ்டி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி ஆகிய வாக்குபதிவு மையங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார் (வடக்கு), மாருதிப்பிரியா (தெற்கு), வட்டாட்சியர்கள் விஜய ரங்க பாண்டியன் (வடக்கு), சேகர் (பேரூர்), பேரூர் தேர்தல் துணை வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் இருந்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் ஒரே இடத்தில் 10 வாக்குச்சாவடிகள் அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு, மேலும் வாக்குச்சாவடி மையங்களில் போதுமான இடவசதி, சாய்வுதளம், மின்சாரம், இருக்கைகள், குடிநீர் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில், வாக்குபதிவின் போது தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து அவர் 117-கவுண்டம் பாளையம் சட்டமன்ற தொகுதி, காளபட்டி விளாங்குறிச்சி மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட செல்வபுரம் ஆகிய பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவம் 12டி விநியோகம் செய்யப்படும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினரின் வாகனத் தணிக்கை நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img