கோவையில் சேரன் காலேஜ் ஆப் பிசி யோதெரபி, உயிர் என்ஜிஓ இணைந்து, உலகத் தலைக் காயம் விழிப்புணர்வு நாள் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை நடத்தின.
கோவை செல்வபுரம் சிவாலயா சிக்னலில் தொடங்கிய பேரணி, சேரன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் வளாகத்தில் நிறைவடைந் தது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குறிப் பாக ஹெல்மெட் அணி வதன் அவசியத்தை வலியுறுத்துதல் மற்றும் தலைக்காயங்களைத் தடுக்கும் பாதுகாப்பு நடை முறைகளை பரப்புதல் ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும்.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கோவை பிரிவு சாலை பாதுகாப்பு அதிகாரி இன் ஜினியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். அவர், “ஹெல்மெட் அணி வது உயிரைக் காக்கும் அடிப்படை பாதுகாப்பு நடைமுறையாகும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், காவல் துறை ஆய்வாளர் ஜோசப், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு உரை யாற்றி, பேரணியில் பங் கேற்றனர். சேரன் கல்விக் குழு மத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஸ்நேகா ஸ்ரீதர் வழிகாட்டுதலில் இந்நிகழ்வு நடைபெற்றது. அதேபோல், சேரன் காலேஜ் ஆப் பிசியோ தெரபி முதல்வர் டாக்டர் அரூனா தலைமையில் பேரணி சிறப்பாக ஒருங் கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்வை டாக்டர் கிரிஸ்பு ஜெப்பராஜ் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தார்.
பேரணியில் மாணவர் கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, சாலை பாது காப்பு குறித்த வாசகங்கள் கொண்ட பலகைகள் மற்றும் கோஷங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற் படுத்தினர். “ஹெல்மெட் அணிவோம் & உயிரைக் காப்போம்” என்ற கோஷம் எழுப்பி விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது.



