fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் ராஜம்மாள் தேவதாஸ் நினைவு நாள் அனுசரிப்பு

அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் ராஜம்மாள் தேவதாஸ் நினைவு நாள் அனுசரிப்பு

அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையும் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து நேற்று (17ம் தேதி) காலை 11.30 மணியளவில் முன்னாள் நிர்வாக அறங்காவலரும் வேந்தருமான முனைவர் இராஜம்மாள் பா.தேவதாஸ் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா உயர் தொழில்நுட்ப அரங்கத்தில் அனுசரிக்கப்பட்டது. அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மற்றும் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வேந்தர் முனைவர் தி.ச.க.மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்கள்.

அவர் பேசுகையில், அனைத்து பெண்களுக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும். சிறந்த ஆளுமை தன்மை உடையவர்களாக பெண்கள் உருவாக வேண்டும். தன்னலமின்றி பொது நலமுடையவர்களாக வாழ வேண்டும் என்ற அம்மாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடமாகும் என்று கூறினார்.

அவினாசிலிங்கம் பல்கலைக் கழக் பொருளாதாரத் துறை மேனாள் பேராசிரியர், அவினாசிலிங்கம் நிறுவன முன்னாள் மாணவ சங்கத் தலைவர் முனைவர் இரா. அன்னபூரணி சிறப்புரை ஆற்றினார்.

“அம்மா” என்ற சொல்லின் முக்கியத்துவம் மற்றும் டாக்டர் ராஜம்மாள் பி. தேவதாஸுடனான ஆழமான தொடர்பு விளக்கப்பட்டது. “காவிய பெண்” என போற்றப் பட்ட இவர், பெண்களுக்கு கல்வி வாய்ப்புகள் குறைந்திருந்த கால கட்டத்தில் பல சவால்களை எதிர்கொண்டு முன்னேறிய அவரது வாழ்க்கைப் பயணம் பேசப்பட்டது.

அவினாசிலிங்கத்தில் மூன்று முக்கியப் பாடப்பிரிவுகள் (Triple Major System) அறிமுகப்படுத்திய அவரது முன்னோடியான பங்கு, உலகப் புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணராகவும், சிறந்த எழுத் தாளராகவும் திகழ்ந்தது எடுத்துக்காட்டப்பட்டது. முதல் துணைவேந்தராக அவர் ஆற்றிய சிறந்த நிர்வாகத் திறன், தமிழ்நாட்டின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை கள் (ICDS) தொடர்பான கொள்கை வடிவமைப்பில் அவர் செய்த பங்களிப்புகள் குறிப்பிடப்பட்டன.

1998ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, பல ஆயுள் சாதனை விருதுகள் மற்றும் கௌரவ டாக்டர் பட்டங்கள் ஆகியவை அவரது சிறப்பான பணிக்கான சான்றுகளாகக் கூறப்பட்டன.

சிறப்பு விருந்தினர் பேசுகை யில், தாய்மையுணர்வு, கடவுள் நம்பிக்கை, இடர்பாடுகளை எதிர்கொள்ளும் துணிச்சல், சிறந்த ஊட்டச்சத்து நிபுணர், நிர்வாக திறமை உடையவர், புத்தாக்க சிந்தனை கொண்டவர், தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படுபவர்,கடின உழைப்பு, ஒருமித்த சிந்தனை, நாட்டுப்பற்று, விருந்தோம்பல், அன்பு, கல்வி யின் மேல் மோகம் எனப் பன் முக தன்மையோடு அம்மா செயல்பட்டார்கள்.

அவருடைய வாழ்க்கை நமக்கு மிகப்பெரிய வழிகாட்டுதலாக அமையும் என்று கூறினார். சாதனைகளைப் புரிந்த ஆளுமைகளை நினைவு கூறுவதன் வாயிலாக மாணவி யரிடையே தன்னம்பிக் கையும், விழிப்புணர்வும், எதையும் சாதிக் கும் மனப்பாங்கும், கல்வி கற்கும் நிறுவனங்களின் நோக்கமும் குறிக்கோளும் சரியாகச் சென்று சேரும் என்று கூறினார்.

அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயர் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் வி.பாரதி ஹரிசங்கர், தனது உரையில், நிறுவனத்தின் நீடித்த பாரம்பரியத்தை வடிவ மைப்பதில் டாக்டர் ராஜம்மாள் பி.தேவதாஸின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அம்மா எப்போதும் அந்த நிறுவனத்திற்கு எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியத்துவம் கொடுத்தார் என்று அவர் குறிப்பிட்டார். வலிமையான மற்றும் உறுதியான தலைவராக இருந்தபோதிலும், அவர் முற்றிலும் அகங்காரம் அற்றவராக இருந்து, அந்த நிறுவனத்தை பெரும் உயரத்திற்குக் கொண்டு செல்ல அயராது உழைத்தார்.

அவினாசிலிங்கம் அய்யாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அம்மாவால் வடிவமைக்கப்பட்ட இந்த நிறுவனம், அவர் நிலைநாட்டிய கொள்கைகளையும் விழுமியங்களையும் அதன் அனைத்துப் பங்குதாரர்களும் ஓரளவிற்காவது பின்பற்றினால், மேலும் மேலும் வலுப்பெற்றுத் தொடர்ந்து வளரும் என்று துணைவேந்தர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக மனையியல் புல முதன்மையர் பேராசிரியர் முனைவர் எஸ் அம்சமணி வரவேற்புரை வழங்கினார். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஹெச். இந்து நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img