தேர்தல்களில் இலவ சங்கள் கூடாது என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்படி இருக்கையில், அக்கட்சியின் நிர்வாகி அருண்ராஜ் படம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, வாக்காளர்களுக்கு விநியோ கிக்கப்பட இருந்த சில்வர் பாத்திரங்களை போலீ சார் பறிமுதல் செய் திருக்கின்றனர்.
இலவசங்களின் அவசியம்:
இலவசங்கள் என்பது, பொருளாதாரத்தில் நலிவடைந்து இருக்கும் மக்களை, பொது நீரோட்டத்துடன் கலக்க செய்வதற்காகத்தான். இலவச லேப்டாப்களும், பேருந்து பயண அட்டையும் கிராமப்புறத்தில் இருந்த வரும் மாணவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொடுக் கப்படுகிறது. இந்த இலவசங்கள் சில நேரங்களில் இருக்கப் பட்டவர்களுக்கும் சென்று சேர்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதற்காக ஒட்டுமொத்த இலவசங்களையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுந் திருக்கிறது. இருப்பினும் தவெக போன்ற அரசியல் கட்சிகள் இலவசங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றன.
இப்படி பேசி வரும் கட்சிகள், மறுபுறம் இலவச திட்டங்களை அறிவித் திருக்கின்றன. விஜய் தேர்தல் வாக்குறுதி கொடுக் கும்போது, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச எல்பிஜி சிலிண்டர்கள், அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை, மற்றும் திருமண உதவி உள்ளிட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அது மிகப்பெரிய விமர்சனங்களாக வெடித்தி ருந்தது.
இப்போது அக்கட்சி யின் நிர்வாகியாக உள்ள அருண்குமார், இதேபோன்ற சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது, அவரது புகைப்படங்கள் அச்சிடப்பட்ட சில்வர் டப்பாக்கள் வாக்கா ளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்ததாக குற்றச் சாட்டில் சிக்கியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதி யில் இந்த சில்வர் டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



