ஆப்பிரிக்காவில் எம்.எஸ்.எம்.இ.எஸ் தொழில் புரிய உள்ள வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கு கொசிமா அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆசியா- ஆப்ரிக்கன் சேம்பர் காமர்ஸ் & இண்டஸ்ட்ரி அசோசியேஷன் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ஜானி ஜெர்மன்ஸ் கலந்து கொண்டு ஆப்பிரிக்காவில் புதிதாக தொழில் தொடங்குவதற்கு உண்டான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றியும் அதற்கான கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏ.ஏ.சி.சி.ஐ உறுப்பினர்கள் ஒட்டக்குத்தன் ராமசாமி, அக்யுலா ஜாய்ஸ், தேஜே ராவ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை கிருஷ்ண மூர்த்தி (முன்னாள் தலைவர் கொசிமா) தலைமையேற்று நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் மதிவாணன், செயலாளர் குமார், பொருளாளர் சௌந்தர்ராஜ், உடனடி முன்னாள் தலைவர் நடராஜன், துணைத் தலைவர் லோகநாதன், இணைச் செயலாளர்கள் நவநீதகிருஷ்ணன், சிஜூ, மகேஸ்வரன் மற்றும் கொசிமா முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



