fbpx
Homeபிற செய்திகள்தேர்தலுக்கு பிறகு அதிமுகவை பாஜக கபளீகரம் செய்து விடும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தேர்தலுக்கு பிறகு அதிமுகவை பாஜக கபளீகரம் செய்து விடும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவை பாஜக கபளீகரம் செய்து விடும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக துணை அமைப்புகளின் நிர்வாகிகள், துணை அமைப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தருமபுரி-பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது, மாவட்டச் செயலாளர்கள் (மேற்கு) பி.பழனியப்பன், ஆ.மணி எம்பி (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அழுத்தம் அளித்தது, தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், கல்விக் கொள்கையில் சமரசம் இன்றி, இருமொழிக் கொள்கைத் திட்டம் தொடரும் என முதல்வர் அறிவித்தார்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மூன்றாவது மொழியாக இந்தி மொழி திணிக்கப்படும். அதேபோல குலக்கல்வித் திட்டம் மறைமுக மாக அமல்படுத்த வேண்டிய சூழல் நிலவும். எனவே இந்த திட் டத்தை ஏற்கவில்லை. மேலும், மத்திய அரசு கல்வி நிதியை நிறுத்தி வைத்திருந்தாலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கொள்கையில் சமரசமின்றி தமிழகத்துக்கான கல்விக்கான நிதியை அளித்து வருகிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்மையில் நிதிநிலை அறிக் கையை வாசித்தார். அதில் தமிழ கத்துக்கான எந்த திட்டமும் அறி விக்கப்படவில்லை. தமிழகம் என்கிற பெயர் கூட அதில் இடம் பெறவில்லை. ஆனால், அந்த நிதிநிலை அறிக்கை வாசித்து முடிப்பதற்குள் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அதற்கு பாராட்டு கடிதம் அனுப்புகிறார்.

பீகார் மாநிலத்தில் 10 முறை முதல்வராக பதவி வகித்தவர் நிதிஸ்குமார். தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில ஆட்சியை பாஜக தன்வசப் படுத்திக்கொண்டது. பாஜக கூட்டணியில் இருந்து அவர்கள் வெற்றிக்காக உழைத்தவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதே நிலைதான் தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஏற் படும்.

தமிழகத்தில் சட்டப்பேர வைத் தேர்தல் நெருங்கி வருவ தால், பிரதமர், உள்துறை அமைச் சர் அடிக்கடி தமிழகத்துக்கு வருகை தருகின்றனர். அண் மையில் மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்ட பெரியார் படம் பிரதமர் மோடிக்கு பிடிக்காததால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற பாஜக கூட்டணி கட்சிகளின் மாநாட்டில் எடப்பாடி கே.பழனிசாமி உருவப்படமே வைக்கப்படவில்லை. எனவே தேர்தலுக்கு பிறகு அதிமுகவை பாஜக கபளீகரம் செய்து விடும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வர் திட்டம், அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டம், விடியல் பயணம் திட்டம், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

எனவே இந்தத் திட்டங்கள், அதன் பயன்கள், அரசின் சாதனைகள் ஆகியவை குறித்து திமுக அனைத்து துணை அமைப்பு நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று பரப்புரை செய்ய வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பரப்புரை செய்ய வேண்டும். மக்களிடம் சென்று பேசும்போதும், பொதுவெளியில் பேசும்போதும் கட்சியினர் மிகுந்த கண்ணியத்தோடு பேச வேண்டும். நமக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. எனவே, நமது வரலாற்றையும், ஆட்சியின் சாதனைகளையும் உரிய தரவுகளுடன் எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்பட தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற அனைவரும் களப்பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img