fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உட்பட 244 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா கடலூர் கலெக்டர் சிபி...

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உட்பட 244 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்

கடலூர் தாலுகா பகுதியில் பல்வேறு இடங் களில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் 118 பேருக்கும், திருநங்கைகள் 47 பேருக்கும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 65 பேருக்கும், இதர பயனாளி கள் 14 பேருக்கும் என மொத்தம் 244 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, 244 பேருக்கு பட்டா வழங்கி னார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி, கடலூர் கோட்டாட்சியர் சுந்தர ராஜன், மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் சித்ரா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவ லர் கமலம், தாசில் தார் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img