fbpx
Homeபிற செய்திகள்2025ம் ஆண்டில் 75 ‘எக்மோ’ சிகிச்சை: கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சாதனை

2025ம் ஆண்டில் 75 ‘எக்மோ’ சிகிச்சை: கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை சாதனை

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை, அதிநவீன தீவிர சிகிச்சை அளிப்பதில் இந்தியாவில் ஒரு முன்னணி மையமாகத் திகழ்கிறது. குறிப்பாக, இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ‘எக்மோ’ எனப்படும் செயற்கை சுவாசக் கருவி மூலம் மறுவாழ்வு அளிப்பதில் மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது. உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

இது நோயைக் குணப்படுத்தாவிட்டாலும், உடல் உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையைத் தானே செய்து, நோயாளியின் உடல் தானாகவே குணமடைவதற்குத் தேவையான ‘கூடுதல் நேரத்தை’ வழங்குகிறது.

அதிநவீன வசதிகள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவக் குழுவின் உதவியுடன், கடந்த 5 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட எக்மோ சிகிச்சைகளை கேஎம்சிஹெச் வெற்றிகரமாகச் செய்துள்ளது. குறிப்பாக, 2025-ஆம் ஆண்டில் மட்டும் 75 எக்மோ சிகிச்சைகளை அளித்துள்ளது. இது தமிழகத்திலேயே மிக அதிக எண்ணிக்கையாகும். இதன் மூலம் இந்தியாவின் மிகச்சிறந்த எக்மோ சிகிச்சை மையங்களில் ஒன்றாக கேஎம்சிஹெச் உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலேயே இரண்டாவது மருத்துவமனையாக ‘எக்மோ ஆம்புலன்ஸ்’ வசதியை கேஎம்சிஹெச் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை எக்மோ கருவியின் உதவியுடனேயே பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து வர முடியும். மேலும் தகவலுக்கு கேஎம்சிஹெச் எக்மோ குழுவைத் தொடர்பு கொள்ள: 0422-4323647 / 4323195 கேட்டுக் கொள்ளப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img