fbpx
Homeபிற செய்திகள்தவெக தலைவர் விஜயை கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை பாஜக துணைத் தலைவர்...

தவெக தலைவர் விஜயை கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேட்டி

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறினார்.

அவர் ஈரோட்டில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தலை மையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமை யும். அதன் தலைவராக எடப்பாடி விளங்குவார். அதிமுக தனித்து ஆட்சி அமைத்தாலும் அது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று தான் அர்த்தம். தமிழகத்தில் கஞ்சா மது விற்பனை கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பல குற்ற செயல்கள் நடக் கின்றன.

அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. மது விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் தான் பெண்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. அதை மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் ஓட்டு போட மாட்டேன் என்று கூற வேண்டும்.

பெட்ரோல் டீசல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் ஆட்சி இருக்கக் கூடாது என்கிறோம். சாதாரணமாக ஒரு எம்பி எம்எல்ஏவின் மகன் பதவிக்கு வருவது வாரிசு அரசியல் அல்ல.
ஈரோடு அருகே உள்ள காலிங்கராயன் கால்வாய் தொட்டி பாலம் மற்றும் ஊத்துக்குளி அருகே உள்ள குமரிக்கல் புராதன சின்னங்களை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உடன் பாஜக மாவட்ட தலைவர் எஸ்.எம்.செந்தில், துணைத் தலைவர் புனிதம் ஐயப்பன் உட்பட பலர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img