fbpx
Homeபிற செய்திகள்ராவ் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம்

ராவ் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம்

ராவ் மருத்துவமனை சார்பில் ‘ராவ் மருத்துவமனை EndoMarch 2026’ எனும் 5 கி.மீ நடைபயணத்தின் 3-வது பதிப்பு, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நடைப்பயணத்தை, ஆர்.எஸ்.புரம், பி2 காவல் நிலைய ஆய்வாளர் நந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், சமூக நலத்திற்காக ஆற்றிய சேவைகளை பாராட்டும் வகையில் டாக்டர் லீமா ரோஸ் கௌரவிக்கப்பட்டார்.

இது குறித்து ராவ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆஷா ராவ் கூறுகையில், “ராவ் மருத்துவமனையில் செயல்படும் FEM-I மையத்தின் வாயிலாக, எண்டோமெட்ரியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நவீன சிகிச்சைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img