fbpx
Homeபிற செய்திகள்141 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடியில் நலத்திட்ட உதவிகள்- கோவை கலெக்டர் வழங்கினார்

141 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடியில் நலத்திட்ட உதவிகள்- கோவை கலெக்டர் வழங்கினார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று (12ம் தேதி) மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 141 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் மற்றும் தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மடக்கு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், ஊன்றுகோல், கறுப்பு கண்ணாடி மற்றும் மடக்கு கோல்கள், காதொலிக்கருவி, பிரெய்லி கைக்கடிகாரம் உருப்பெருக்கி, பிரெய்லி ரீடர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 137 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.1,01,800 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.7000 மதிப்பீட்டில் கமோட் சக்கர நாற்காலிகள் (commode Wheelchair) என மொத்தம் 141 பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img