Homeபிற செய்திகள்கோவையில் பெண்கள் பங்கேற்ற பைக் விழிப்புணர்வு மாரத்தான்

கோவையில் பெண்கள் பங்கேற்ற பைக் விழிப்புணர்வு மாரத்தான்

மகளிர் தினத்தை முன்னிட்டு தவெக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற பைக் விழிப்புணர்வு மாரத்தான் (ரேலி) திரளான பெண்கள் பங்கேற்றனர்.

தமிழக அரசியலில் தடம் பதித்து வரும் தமிழக வெற்றிக் கழகம், தற்போது கோவையில் நடைபெற்ற “பைக் விழிப்புணர்வு மாரத்தான்” பேரணி மூலம் ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தவெகவைச் சேர்ந்த ஏ.ஆர்.ரீகன் ஏற்பாடு செய்திருந்தார்.

கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் பாதுகாப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் “Queen on Roads: Breaking Barriers – Awareness on Wheels” என்ற சிறப்பு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

இந்த ராலியானது ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பரியல் மைதானத்தில் துவங்கியது. இதனை தவெகவின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓட்டத்தைத் துவக்கி வைத்தார்.

இந்த ராலியானது, ஆர். எஸ் புரத்தில் இருந்து துவங்கி அங்கிருந்து பெண்கள் பைக் பேரணி மூலம் நகரில் விழிப்புணர்வு பரப்பி தொண்டாமுத்தூர் பகுதி வரை சுமார் 16 கிலோ மீட்டர் வரை சென்று நிறைவு செய்தனர்.

இந்த சர்வதேச பெண்கள் தினவிழா கொண்டாட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் புற்று நோய் விழிப்புணர்வு ஆரம்ப கட்ட கண்டறிதல் மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக ‘Say No to Drugs’ என்ற செய்தியை பொதுமக்களுக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிகழ்வை ஏற் பாடு செய்திருந்த ஏ.ஆர்.ரீகன் இந்தியாவில் உள்ள நான்கில் இரண்டு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் டிராக்கில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் பங்கு பெற்றுள்ளார். மோட்டார் ஸ்போர்ட்ஸில் அதிக அனுபவம் கொண்டவர்.

படிக்க வேண்டும்

spot_img