தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்“ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு ஊரக நகர் புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 171 பயனாளிகளுக்கு ரூ.20.94 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்புகளையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.4.85 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி என மொத்தம் 174 பயனாளிகளுக்கு ரூ.20.98 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா மற் றும் விற்பனை கண்காட்சியில் கலந்து கொண்ட உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் வட்டாரங்களை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரசு தலை மைக் கொறடா ராமச்சந்திரன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகமெல்லாம் பரவும் வகையிலும், தமிழ்நாட்டு மக்கள் பயன்பெறும் வகையிலும், இந்தியாவே பார்த்து வியக்கும் வண்ணம் இதுபோன்றதொரு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அதேபோன்று அரசின் திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப் படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே தன்னார்வலர்கள் மற்றும் அலு வலர்கள் நேரடியாக சென்று அறிந்து கொள்ளும் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 1.92 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் தங்களது கனவு களை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
மேலும், முதலமைச்சர் சாதாரண கிராமப்புற பகுதிகள் மட்டுமின்றி நகராட்சி, மாநகராட்சி பகுதிகள் வரை என்ன செய்ய வேண்டும் என எடுத்துரைத்துள்ளார்கள். இவை மட்டுமன்றி இந்த மாநிலத்தை பசுமைப்புரட்சி நிறைந்த மாநில மாகவும், 24 சதவீதம் வனப்பகுதியாக இருந்ததை 33 சதவீதம் வனப்பகுதியாக மாற்றும் வகையில் பலகோடி ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகளை அதற்கென ஒரு தனித்துறையினை அமைத்து நடவு செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், ஐந்தாண்டு சாதனை புத்தகத்தினையும் அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கௌர், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மரு.ஜெயராமன், நகர்மன்ற தலைவர்கள் வாணீஸ்வரி (உதகை), பரிமளம் (கூடலூர்), சுசீலா (குன்னூர்), உதகை நகர்மன்ற துணைத்தலைவர் ரவிக்குமார் உட் பட பலர் கலந்து கொண்டனர்.



