fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி புதிய எஸ்பியுடன் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள் சந்திப்பு

தூத்துக்குடி புதிய எஸ்பியுடன் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள் சந்திப்பு

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சி.மதன் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரை பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம்-ஒழுங்கு பிரிவு உதவித் தலைமைக் காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அவருக்குப் பதிலாக திருநெல்வேலி மாநகர மேற்கு துணை ஆணையராக இருந்த சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக் கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் வேலுச்சாமி, செயலாளார் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜ பெருமாள் தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் சி.மதனை, நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img