இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் கேந்திரா சார்பில் இளையோர் தலைமைத்துவ பண்புகள் பயிற்சி முகாம் ஈரோடு டாக்டர்.ஆர்.ஏ.என்.எம் கலை அறிவியல் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
இதனை கேந்திரா அலுவலர் கீர்த்தனா, கல்லூரி தலைமை இயக்குனர் பழனியப்பன், வழக்கறிஞர்கள் திருமலை ராஜா, முதல்வர் நளினி, நந்தா கலை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தேவகாந்தன், ஹார்ட்புல்நெஸ் இன்ஸ்டிடியூட் ஈரோடு டிஎல்ஓ மகாதேவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இரண்டாம் நாள் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் பிரபு, கீதாஞ்சலி, சமூக சேவகர்கள் மாயவன், வெங்கடேஷ் பேபி, நிதி ஆலோசகர் குருராஜன், சாய் ராஜ் கல்வி அறக்கட்டளை வரதராஜன், பவி ஹெல்த் லைஃப் பவுண்டேசன், கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
மூன்றாம் நாள் வழக்கறிஞர் பரணிதரன் (ஈரோடு சட்டக் கல்லூரி முதல்வர்), அக்பர் அலி பெய்க், ரகுநாத் (நிர்வாக இயக்குநர் கான்ஃபுட் ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட்), மனோகரன் (செயல் தலைவர் DSR EV மொபிலிட்டி) ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட 40 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.



