fbpx
Homeபிற செய்திகள்கோவை நேரு நகரில் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் புதிய கிளை திறப்பு

கோவை நேரு நகரில் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் புதிய கிளை திறப்பு

குழந்தைகளின் ஆர்வத்தையும் கற்றல் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கிலும் அறிவு, ஒழுக்கம், உணர்ச்சி மற்றும் படைப்பாற்றல் வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் நோக்கிலும் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் 2019 ஆண்டு வரதராஜபுரத்தில் துவங்கப்பட்டது.

தற்போது 220 குழந் தைகளுடன் செயல்பட்டு வரும் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் நிறுவனத்தின் இரண்டாவது கிளை கோவை நேரு நகர் வெஸ்ட் ஜி.கே.டி நகரில் திறக்கப்பட்டது.

திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த மிடாஸ் டச் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் நிறுவனரும் கோயம்புத்தூர் பாரா ஸ்போர்ட்ஸ் சங்க தலைவரும் பாஜக கல்விப் பிரிவு மாநில செயலாளருமான சர்மிலா ராம் ஆனந்த் புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழாவில் அவர் பேசுகையில், “குழந்தைக ளின் ஆரம்பக் கல்வி வாழ்க்கையில் ப்ரீஸ்கூல் கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

விளையாட்டு மற்றும் அனுபவ அடிப்படையிலான கற்றல் முறைகள் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகின்றன.

மேலும், வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ் கூல் மேற்கொள்ளும் கல்வி அணுகுமுறை பாராட்டுக்குரியது” என்றும் குறிப்பிட்டார்.

வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் நிர்வாக இயக்குனர் பிரவீன்குமார் கூறுகையில், “விளையாட்டு வழிக்கற்றல் மற்றும் அனுபவ அடிப்படையிலான கல்வி முறையின் மூலம், குழந்தைகளின் ஆர்வம், சுயநம்பிக்கை மற்றும் சமூகத் திறன்கள் மேம் படும் வகையில் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் செயல்பட்டு வருகிறது. வரும் ஆண்டி லேயே கோவையில் 10 கிளையை துவங்க திட்டமிட்டுள்ளோம்“ என்றார்.

நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த புதிய கிளை மூலம், கோயம்புத்தூர் பகுதியில் முன்பள்ளி கல்வி மேலும் வலுப்பெறும் என பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img