கோவையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 72 வயது முதியவருக்கு ‘ரிவர்ஸ் ஷோல்டர் ரீப்ளேஸ்மென்ட்’ (Reverse Shoulder Replacement) என்னும் தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப் பட்டு, அவருக்குப் புதிய வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
ராயல் கேர் மருத்துவமனையின் மூட்டு மாற்று மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தினேஷ் சிதம்பரம் (MS Ortho., DNB, FUTS, Senior Consultant Orthopeadic Surgeon) தலைமையிலான குழுவினர் இந்தச் சவாலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இச்சிகிச்சை பெற்ற முதியவர் கடந்த 7 மாதங்களாகக் கடுமை யான தோள்பட்டை வலி மற்றும், கையை அசைக்க முடியாத நிலையில் அவதிப்பட்டு வந்தார். பரிசோதனையில், அவரது தோள் பட்டை தசைநார் முற்றிலும் சரி செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப் பட்டது.
கையின் எலும்பின் தலை (Ball) உலோகத்தாலும், தோள்பட்டை பகுதியின் குழி (Socket) பிளாஸ்டிக் பொருளால் மாற்றப்படுவது டோட்டல் ஷோல்டர் ரிப்ளேஸ்மென்ட், இது தோள்மூட்டில் அர்த்ரைட்டிஸ் (Arthritis) உள்ளவர்கள், ரோட் டேட்டர் கஃப் தசைகள் நன்றாக செயல்படும் நோயாளிகள், நடுத்தர வயது அல்லது உடல் இயக்கம் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்றது.

Ball தோள்பட்டையில் பொருத்தப்படும், Socket கையின் எலும்பில் பொருத்தப்படுவது ரிவர்ஸ் ஷோல்டர் ரிப்ளேஸ்மென்ட் ஆகும். இதனால், சேதமடைந்த ரோட்டேட்டர் கஃப் தசைகளுக்கு பதிலாக டெல்டாய்ட் தசை தோளை இயக்க உதவுகிறது. இது வயதான நோயாளிகள், பெரிய அளவிலான ரோட்டேட்டர் கஃப் கிழிவு உள்ளவர்கள், பழைய தோள்சிகிச்சை தோல்வியடைந் தவர்கள், தோள்பட்டை எலும்பு முறிவு (Fracture) உள்ள முதிய வர்களுக்கு ஏற்றது ஆகும்.
இதையடுத்து, அவருக்கு வயதுக்கு ஏற்றவாறு ‘ரிவர்ஸ் ஷோல்டர் ரீப்ளேஸ்மென்ட்’ சிகிச்சை அளிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலையில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தனது அன்றாடப் பணிகளை யாருடைய உதவியுமின்றித் தாமாகவே மேற்கொண்டு வருகிறார். இது குறித்து டாக்டர் தினேஷ் சிதம் பரம் கூறுகையில், “இந்தச் அறுவை சிகிச்சை அவருக்கு ஒரு மறுவாழ்வை அளித்துள்ளது. அவர் மீண்டும் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அன்றாட வேலைகளைச் செய்வதைப் பார்ப் பதில் மகிழ்ச்சியடைகிறோம்,” என் றார்.
மருத்துவமனையின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் க.மாதேஸ்வரன் கூறுகையில், “இந்த நவீன மருத்துவத் தொழில்நுட்பம் முதியவர்கள் மற்றும் நீண்டகாலத் தோள்பட்டை வலி முடக்கம் உள்ள நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்,” என்றார்.



