fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கு 3 நாட்கள் புத்தாக்கப்பயிற்சி

கோவை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கு 3 நாட்கள் புத்தாக்கப்பயிற்சி

கோவை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான 2025 ஆம் ஆண்டிற்கான மூன்று நாட்கள் புத்தாக்கப்பயிற்சி ஆனைக்கட்டி எஸ்.ஆர். ஜங்கிள் ரெசார்ட்டில் நேற்று (21ம் தேதி) தொடங்கியது.

இப்பயிற்சி வகுப்பினை கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் சு.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் பணியமைப்பு சட்டப் பணிகள், தணிக்கை, வருமானவரி, சைபர் பாதுகாப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் மண்டல இணைப்பதிவாளர் அ.அழகிரி, துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தின் இணைப் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் வ.சி.கோமதி, துணைப்பதிவாளர்கள் தினேஷ்குமார், வடிவேல், ஆனந்தன், சிவக்குமார், கீதா, ஜெயக்குமார், காவியா நல்லமணி, அகல்யா (பயிற்சி) மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img