fbpx
Homeபிற செய்திகள்பேட்மிண்டன் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

பேட்மிண்டன் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

தஞ்சை சேலஞ்சர்ஸ் பேட்மிண்டன் கிளப் நடத்தும் எஸ்.ராஜூ நாயுடு& கௌசல்யா ஆகியோரின் பத்தாம் ஆண்டு நினைவுக் கோப்பை போட்டி 2026, கிளப்பில் நடைபெற்றது.

முதல் பரிசை வென்ற சூர்யா -லோகேஷ்க்கு தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜெய்.சதீஷ் முதல் பரிசாக ரூ.8000 வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற ரீகன் & தருமனுக்கு ரூ.6000 ஐ ஆடிட்டர் இரா.ரவிச்சந்திரன் வழங்கினார்.


மூன்றாம் பரிசு பிரித்தி விராஜ் & பயாஸ்க்கு ரூ.3000ஐ- ரத்னா ஜூவல்லரி உரிமையாளர் சரவ ணன் வழங்கினார். மற்றொரு மூன்றாம் பரிசை குமார்& சஞ்சய்க்கு வழக் கறிஞர் ந.செல்வராஜ் வழங்கினார்.

இந்த போட்டியை சிறப்பாக நடத்தி கொடுத்த பயிற்சியாளர் கே.வெங்கடேஷ், பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளர் சுப்பிரமணி சர்மா, ஸ்ரீ ரத்னா ஜுவல்லரி உரிமையாளர் சரவணன், ஆர்.மகேந்திரன், விஜய் மற்றும் கே.சுதாமன் ஆகியோருக்கு இரா.ரஜினி கணேசன், தஞ்சை சேலஞ்சர்ஸ் பேட்மிண்டன் கிளப் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img