fbpx
Homeபிற செய்திகள்கேஎம்சிஹெச்சில் அதிநவீன நரம்பியல் மையத்தை குடியரசு துணை தலைவர் திறந்து வைத்தார்

கேஎம்சிஹெச்சில் அதிநவீன நரம்பியல் மையத்தை குடியரசு துணை தலைவர் திறந்து வைத்தார்

கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை (கேஎம்சிஹெச்), உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவையை வழங்கும் தனது பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கேஎம்சிஹெச்-ன் புதிய நரம்பியல் அறிவியல் மையம் (Institute of Neuro Sciences), புறநோயாளிகள் பிரிவு மற்றும் மருத்துவக் கல்லூரி முதுகலை கல்வி நிறுவனம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.


இதில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதிய மருத்துவக் கட்டடத்தையும், கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி முதுகலை கல்வி நிறுவனத்தையும் திறந்து வைத்தார்.

இந்த விழாவிற்கு கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தலைமை தாங்கினார். கேஎம்சிஹெச் துணைத் தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நவீன மருத்துவக் கட்டடம் 1,75,000 சதுர அடி பரப்பளவில் 7 அடுக்குகளுடன் இந்த புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஒரே கூரையின் கீழ் அனைத்து உயர்தர சிகிச்சைகளும் கிடைக்கும் வகையில் 6 சிறப்பு சிகிச்சை மையங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த கட்டிடத்தில், அதிநவீன ஹைப்ரிட் ஆபரேஷன் தியேட்டர், செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும்  MRI & CT ஸ்கேன், புதிய நரம்பியல் மற்றும் நரம்பு அறுவை சிகிச்சை மையம், குடல் மற்றும் கல்லீரல் எண்டோஸ்கோபிக்கான பிரத்யேக அறைகள், எண்டோகிரெய்ன் மற்றும் மெட்டபாலிக் சிகிச்சைக்கான பிரத்யேக அறைகள் முதலிய வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய மையத்தில் விரைவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ARTIS ICONO பைப்ளேன் கேத் லேப் மற்றும்  NEXARIS ஆஞ்சியோ சூட் ஆகிய இரு அதிநவீன தொழில்நுட்பங்களும் இணைந்த இந்தியாவின் முதல் நரம்பியல் கதிரியக்க மையம் துவக்க உள்ளது.

கேஎம்சிஹெச் தனது கல்விச் சேவையை விரிவுபடுத்தும் வகையில், புதிய முதுகலை கல்வி நிறுவனத்தின் மூலம் MD  மற்றும் MS பிரிவுகளில் 10 வகையான உயர்கல்விப் படிப்புகளைத் தொடங்கியுள்ளது. இவற்றுக்கு தேசிய மருத்துவ கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் 2025 – 2026 கல்வியாண்டிற்கான ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் அளித்துள்ளன.

கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தனது தலைமையுரையில், “எப்போதும் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் கேஎம்சிஹெச் முன்னணியில் இருக்கிறது” என்றார்.

செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி உரையில் “புதிய முதுகலை மருத்துவப் படிப்புகள் மூலம், அடுத்த தலைமுறை மருத்துவ நிபுணர்களை உருவாக்குவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.” என்று கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img