Homeபிற செய்திகள்மண் வள ஆய்வுக்கான விண்வெளி தொழில்நுட்ப விழிப்புணர்வு

மண் வள ஆய்வுக்கான விண்வெளி தொழில்நுட்ப விழிப்புணர்வு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மண் வள ஆய்வுகளில், விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது.

“மண் வள ஆய்வுகளுக்கான விண்வெளி தொழில்நுட்பம்: NISAR – TRISHNA செயற்கைக்கோள் தரவுகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை இயக் குநரகத்தின் கீழ் உள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை மற்றும் முதன்மையர், முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.

மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியரான முனைவர் து.செல்வி நிகழ்விற்கு வரவேற்புரை நிகழ்த்தி, அறக்கட்டளை சொற் பொழிவின் தொடக்க உரையை வழங்கினார்.

தொடக்க விழா உரையில், முதன்மையர் (முதுகலை அறிவியல்) முனைவர் சி. பாபு, மண் வளம் தொடர்பான பல் துறை ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் இயக்குநர் முனைவர் ப.பாலசுப்ரமணியம், சொற்பொழிவாளரான முனைவர் டி. கௌரிசங்கரை அறிமுகப்படுத்தினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ), விண்வெளித் துறை, இந்திய அரசின் சர்வதேச மற்றும் முகமை ஒத்துழைப்பு அலுவலகத்தின் இயக்குநரான இவர், இஸ்ரோவின் சர்வதேச ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதில் ஆற்றிய பாராட்டத்தக்க பங்களிப்புகள் குறித்து விளக்கினார்.

இதில் இருதரப்பு மற்றும் பல தரப்பு ஈடுபாடுகளை வழி நடத்துதல், விண்வெளி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டுறவுகளுக்கு வசதி செய்தல் இஸ்ரோவின் உலகளாவிய திட்டங்களை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும். இவர் இஸ்ரோ/விண்வெளித் துறையின் முக்கியக் குழுக்களில் உறுப்பினராக இருந்து, இந்தியாவின் தேசிய விண்வெளி கொள்கையின் அம்சங்களை வரைவதில் பங்களித்துள்ளார். மேலும், இவருக்கு 2018ம் ஆண்டிற்கான இஸ்ரோ விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சர்வதேச மற்றும் முகமை ஒத்துழைப்பு அலுவலகத்தின் இயக்குநர், முனைவர் டி.கௌரி சங்கர், தனது உரையில் மண் பண்புகளை வகைப்படுத்துவதற்கு, செயற்கைக்கோள் தொலை உணர்வுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மண் அமைப்பு, ஈரப்பதம், கரிம கார்பன் உள்ளடக்கம், உவர் தன்மை மற்றும் மண் சீரழிவு ஆகியவற்றை மதிப்பிடுவதில் மல் டிஸ்பெக்ட்ரல், ஹைப்பர்ஸ் பெக்ட்ரல், ரேடார் மற்றும் வெப்ப உணரிகள் போன்ற பல்வேறு செயற்கைக்கோள் உணரிகளின் பயன்பாடுக ளைப் பற்றி அவர் விளக்கினார்.

இஸ்ரோவின் இரண்டு முக்கிய சர்வதேச கூட்டுத் திட்டங்களான NISAR மற்றும்TRISHNA பற்றிய விவரங்களையும், மண் பண்புகளை ஆய்வு செய்வதில் அவற்றின் பயன்பாடுகளையும் அவர் விவரித்தார்.

மண் ஆய்வுகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மற்ற செயற்கைக்கோள்கள் பற்றிய விவரங்களையும் அவர் வழங்கினார்.

மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் பேராசிரியர் மற்றும் முதுகலை ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே. சத்யபாமா நன்றியுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img