fbpx
Homeபிற செய்திகள்460 பேருக்கு ரேஷன் அட்டைகளை வழங்கினார், அமைச்சர் கீதாஜீவன்

460 பேருக்கு ரேஷன் அட்டைகளை வழங்கினார், அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடும்ப உறுப்பினர்களிலிருந்து பிரிந்து குடியேறியவர்கள், திருமணம் முடிந்து தனியாக வசிப்பவர்கள் என புதிய ரேஷன் அட்டை கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு உணவு பொருள் வழங்கல் துறையினர் முறையாக விசாரித்து புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

460 நபர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் புதிய ரேசன் அட்டைகளை வழங்கினார். நிகழ்வில் வட்டாட்சியர் ஞானராஜ், மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சந்தனமாரி, கவுன்சிலர்கள் சரவணக்குமார். ஜெயசீலி, ஆறுமுகம், வட்ட துணை செயலாளர் சந்திரசேகர், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதிகள் கார்த்திக்கேயன், பாஸ்கர், சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் நிக்கோலஸ் மணி. எம்.எல்.ஏ அலுவலக உதவியாளர் அற்புதராஜ், மணி, அல்பர்ட் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் புதியதாக ஸ்மார்ட் கார்டு பெற்றவர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.3000 வழங்கப்படும் எனவும் இதில் ரேசன் அட்டை வேண்டி விண்ணப்பித்து புதியதாக ரேஷன் அட்டை பெற்றவர்களில் குறிப்பாக 80% புதுமண தம்பதியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img