முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் “உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். மேலும், இத்திட்டப் பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களான தன் னார்வலர்களுக்கு வழங்கினார்கள்.
தேனி மாவட்டத்தில் குடும்ப உறுப்பினர் அட்டை பெற்றுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 3,64,353 குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 938 நபர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 31.01.2026 வரை தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. தன்னார்வலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க 243 மேற்பார்வையாளர்களும் நியமிக் கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை மூலம் தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர்.
அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரி வித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர். தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர்.
இந்த அட்டை மூலம்www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம். அதன்படி, தேனி மாவட்டத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயனடைந்து வரும் நலத்திட்டங்கள் குறித்தும், பொதுமக்களின் கருத்துக்கள் குறித்தும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகள் குறித்தும் பொதுமக்கள் விண்ணப் படிவங்களில் பூர்த்தி செய்து, தன்னார்வலர்களிடம் வழங்கும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர், பாராளு மன்ற உறுப்பினர், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், தேனி -அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், துணைத்தலைவர் செல்வம், வீர பாண்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கீதா சசி, உதவி இயக்குநர்கள் திரு.வில்லியம் ஜேசுதாஸ், (பேரூராட்சிகள்), அண்ணாதுரை (தணிக்கை) மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களான தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



