தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல குறைதீர்க்கும் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 18 மாதங்களாக மாநகராட்சி மண்டலம் வாரியாக தொடர் குறைதீர்க்கும் முகாம் கள் நடைபெற்று வருகிறது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை, கால்வாய், மின்விளக்கு உள் ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படுகிறது.
“உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்பட்ட மாநகராட்சி சம்பந்தப்பட்ட பெரும் பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு மண்டலத்தில் இதுவரை 685 மனுக்கள் பெறப்பட்டு, 665 மனுக்களுக்கு தீர்வு காணப்பட் டுள்ளது, மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
தெற்கு மண்டலத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சி வந்தவுடன் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இங்கு 4 அடி, 5 அடி போன்ற குறுகிய சந்துகளில் கூட பேவர் ப்ளாக் சாலைகள் போடப் பட்டுள்ளன, மழைநீர் தேங்காத வகையில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கடந்த வடகிழக்கு பருவமழையின்போது எங்கும் நீர் தேங்கவில்லை. எதிர்காலத்தில் கனமழை பெய்தா லும் அதை எதிர்கொள்ள மாநக ராட்சி முழு அளவில் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், புதிய கழிவு நீர் கால்வாய்கள், பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள் ளது, கடந்த மூன்று ஆண் டுகளில் கனமழையை வெற்றிகர மாக எதிர்கொண்டு 2025 வது ஆண்டையும் கடந்து வந்துள்ளோம். இனி எந்த பகுதியிலும் மழைநீர் தேங்காத நிலையை ஏற்படுத்துவோம்.
மேலும் குடிநீர் விநியோகத்தில், ஐந்து வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. திருச் செந்தூர் சாலையில் சில தெரு மின்விளக்கு கம்பங்களை கனரக வாகனங்கள் சேதப்படுத்தியதால் தெருவிளக்குகள் எரியவில்லை. இந்த பகுதியில் நான்கு முக்கிய இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.
15 வார்டுகள் அடங்கிய தெற்கு மண்டலத்தில் பெரும்பா லான சாலை பணிகள் முழுமை பெற்றுள்ளது, விடுபட்ட சாலைகள் இருந்தால் பொது மக்கள் மனு அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த மழைக்காலத்தில் கோரம்பள்ளத்திலிருந்து உப்பாத்து ஓடை கடந்து உபரிநீர் கடலில் கலக்கும் இடம் வரை 12 கிலோ மீட்டர் தூரம் ஓடையை சீரமைத்ததால் மழை வெள்ளநீர் சுலபமாக கடலுக்கு சென்றதன் விளைவாக, நகருக்குள் மழைநீர் உட்புகாமல் தடுக்கப்பட்டதாக மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
நிகழ்ச்சியில் இணை ஆணையர் சரவணக்குமார், நகர அமைப்பு திட்ட பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, உதவி ஆணையர் முனீர் அகமது, நகர்நல அலுவலர் சரோஜா, மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பச்சி ராஜன், ராஜேந்திரன், ராஜதுரை, முத்துவேல், வெற்றிச்செல்வன், ஸ்பிக் நகர் பகுதி திமுக செயலாளர் ஆஸ்கர், வட்ட செயலாளர்கள் பிரசாந்த், கருப்பசாமி, சுகாதா ரத்துறை அலுவலர்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டனர்.



