fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் இயல், இசை, நாடகம் நடத்தி கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் இயல், இசை, நாடகம் நடத்தி கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் பல்நோக்கு அரங்கில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச் சியில், அனைத்து வகுப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் நேட்டிவிட்டி காட்சியை தத்ரூபமாக சித்தரித்தது ஓர் சிறந்த நிகழ்வாக இருந்தது.

நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் தமது தலைமையுரையில், மாணவிகள் ஒருங்கிணைந்து நடத்திய நாடகத்தினையும் கிறிஸ்துமஸ்விழா சிறப்பினையும் எடுத்துரைத்து, கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த மாணவிகளுக்கு பாராட்டு களைத் தெரிவித்தார்.

இந்தக் கொண் டாட்டத்தின் சமகால பொருத்தத்தை வலியுறுத்தி, ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை, அன்பு மற்றும் பொறுப்பை உள்ளடக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அன்பு மற்றும் நம்பிக்கையின் செய்தியை முன்னெ டுத்துச் செல்வதற்கான தார்மீகப் பொறுப்பை அவர் மேலும் நினைவுபடுத்தினார்.

சிறப்பு விருந்தினர் கோவை சி.பி.எம். கல்லூரியின் மேனாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் சாந்த பிரபுராஜ் பேசுகை யில், “சிறப்புமிக்க அருமையான கல்விச்சாலையில் கல்வி பயின்று சாதிக்க துடிக்கும் மாணவிகளை இங்கு பார்க்கிறேன். நேட்டிவிட்டி காட்சியில் ஒவ்வொரு மாணவியும் முழு ஈடுபாட்டுடன் நடித்திருந்த விதமும், உடை அலங்காரங்களில் காணப்பட்ட தத்ரூபத்தையும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உயிரோட்டமாக வெளிப்படுத்தியது” என்றார்.

இயேசுவின் பிறப்பு அனைத்து சமூகங்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு உலகளாவிய செய்தியாகும் என்றார். எத்தனையோ காரியங்கள் இந்த விஞ்ஞான உலகில் கணிக்கிறோம். ஆனால், கணிக்க முடியாத காலத்தில் இயேசு பெருமான் வாழ்ந்திருக்கிறார். நம்மோடு நமக்குள் நம்மை வழி நடத்துகிற கடவுளாகவும் இருக்கிறார். கிறிஸ்துமஸின் தனித்துவம் அதன் ஒளியும் மகிழ்ச்சியும் ஆகும்; கடவுள் உலகத்தை அளவில்லா அன்புடன் நேசித்ததற்கான அடையாளமே கிறிஸ்துமஸ்” எனக்கூறி அனைத்து மாணவியருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த ஆசிரியை அனைவருக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார். முன்னதாக ஆங்கிலத்துறைப் பேராசிரியர் முனைவர் எஸ்.கலாமணி வரவேற்புரை ஆற்றினார். விழாவின் நிறைவாக கணினித் துறைப் பேராசிரியர் முனைவர் ஐ.எலிசபெத் சாந்தி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img