அவசர மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை எளி மையாக்கவும், துரிதமாக்கவும் வடிவமைக்கப்பட்டிருக்கும், ஒன் – டேப் – ல் இயங்கும் ‘எஸ்.ஓ.எஸ்’ அவசர கால வசதியைத் ‘காவேரி கேர்’ செயலியில் அறிமுகப்படுத்துவதை காவேரி மருத்துவமனை பெருமையுடன் அறிவித்துள்ளது.
ஒன் – டேப் என்ற இந்த வசதியான புதிய அம்சத்தின் மூலம், நெருக்கடியான நேரங்களில் பயனர்கள் அவசர நிலை உதவி எண்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை; தங்கள் இருப்பிடத்தை விளக்க வேண்டிய தேவையுமில்லை. இதன் வழியாக உடனடி மருத்துவ உதவியை நோயாளிகள் பெற முடியும்.
அவசர காலங்களில் ஏற்படும் பதற்றம், குழப்பம் அல்லது அறிமுகமில்லாத சூழல் காரணமாக, நோயாளிகளுக்கோ அல்லது அருகில் இருப்பவர்களுக்கோ அவசர ஊர்தி சேவைகளுக்குத் தேவையான விவரங்களைத் தெரிவிப்பது பெரும்பாலும் கடினமாக இருக்கும்.
காவேரி மருத்துவமனையின் இந்த ‘எஸ்.ஓ.எஸ்’ வசதி, பயனரின் இருப்பிடத்தை ஜிபிஎஸ் (GPS) மூலம் தானாகவே கண்டறிந்து, அருகில் உள்ள ஆம்புலன்ஸை உடனடியாக சரியான இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கும்.
அதே நேரத்தில், இந்த ‘எஸ்.ஓ.எஸ்’ வசதியானது, பாதிக்கப்பட்டவர் அல்லது அருகில் இருப்பவர், 24 மணி நேரமும் செயல்படும் வீடியோ அழைப்பு வசதி மூலம் காவேரி மருத்துவமனையின் மருத்துவரு டன் தொடர்புகொண்டு விளக்க மளிக்க உதவுகிறது.
இதன் மூலம் அவசர ஊர்தி நோயாளியின் இருப்பிடத்திற்கு வரும் வரை, நிகழ்நேர மருத்துவ ஆலோசனையை நம்பிக்கை தரும் ஆதரவையும் பெற முடியும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தம் பேசுகையில், “சிக்கலான பிரச்சனைகளை எளிய தீர்வுகளாக மாற்றுவதே உண்மையான புத்தாக்க செயல்பாடாகும்.
காவேரி கேர் செயலி அதைத்தான் சிறப்பாக செய்கிறது” என்றார்.
செயலியில் புதிய அம்சத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய காவேரி மருத்துவக் குழுமத்தின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “அவசரநிலையின் போது வழங்க வேண்டிய உடனடி சிகிச்சையில் உள்ள சிக்கல்களை நீக்குவதே எங்கள் நோக்கம்.
காவேரி கேர் ‘SOS’ வசதி மூலம், உதவி என்பது இப்போது ஒன் – டேப் தூரத்தில் தான் இருக்கிறது,” என்று கூறினார்.



