fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற்று பயனடையும் 4,25,186 பெண்கள் முதல்வர்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற்று பயனடையும் 4,25,186 பெண்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 இல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மகளிர் சமுதாய மேம்பாட்டிற்குப் புரட்சிகரமான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மகளிர் சமுதாயத்தை உயர்த்தி வருகிறார். மகளிர்க்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், வாழ்வில் பொருளாதார ஏற்றம் காண விடியல் பயணத்திட்டம், பெண்கல்வியை உயர்த்திடும் புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் பெண்களுக்குத் தோழி விடுதிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப் பட்ட மகளிருக்கான ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, மகத்தான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும்“ என தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் 27.03.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் முதல் கட்டமாக சுமார் 1.13 கோடி பயனாளிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மேலும், 16 இலட்சத்து 94 ஆயிரத்து மகளிர் பயனடையும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-ஆம் கட்டவிரிவாக்கத்தை கடந்த 12.12.2025 அன்று தொடங்கி வைத்து மகளிர்க்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி னார். இதன் மூலம், மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று பயன்பெறுவர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 4,25,186 மகளிர்கள் மாதந்தோறும் ரூ.1000 – பெற்று பயனடைந்து வரு கின்றனர்.
பெண்களின் அன்றாட செலவு களை குறைக்கும் வகையில் செயல்ப டுத்தப்பட்ட விடியல் பயணம் திட் டத்தின் கீழ் திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தில் 190 பேருந்துகள் இயக்கப்பட்டு அதன் வாயிலாக அன்றாட பணிக்கு செல்லும் பெண்கள் பயன் பெற்றுள்ளனர்.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் உயர்கல்வி கற் பதை உறுதி செய்ய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் 6. ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 15,520 மாணவிகள் பயனடைந்து வரு கின்றனர். மேலும் மகளிர் படித்து முடித்துச் சொந்த ஊரை விட்டுவந்து வெளியூரில் தங்கிப் பணிபுரிவதில் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இதைக் களையும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணிபுரியும் மகளிர்க்காக முக்கிய நகரங்களில் எல்லாம் உருவாக்கியுள்ள அருமையான திட்டம் தோழி விடுதிகள் திட்டம். இதன் மூலம் பணிபுரியும் மகளிர் பாது காப்புடன் பணிபுரிகின்றனர். திருவண்ணாமலையில் 130 படுக்கை வசதிகள் மற்றும் பல்வேறு வசதி களுடன் ஒரு தோழி விடுதி கட்டப் பட்டு இயங்கி வருகிறது. இதன் மூலம் வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று பயனடைந்து வரும் திருவண்ணாமலையில் வசிக்கும் புனிதா (54) தெரிவித்ததாவது:
எனது கணவர் பெயர் பாலகுருமூர்த்தி. எனது கணவர் சிறிய மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். கடந்த 12.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் திருகரங்களால் எனக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட் டையை வழங்கினார். இதன் மூலம் எனக்கு மாதந்தோறும் கிடைக்கும் ரூ.1000எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தை தொடங்கி வைத்து பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்க ளுக்கு எனது சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பாகவும் மன மார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று பயனடைந்து வரும் மாமண்டூர் ஊராட்சியில் வசிக்கும் பிரேமா என்பவர் தெரிவித்ததாவது:
எனது பெயர் பிரேமா, வயது 37, கணவர் பெயர் சிவராஜ். எனது கணவர் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் எனக்கு மாதம் ரூ.1000 எனது வங்கியில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு அண்ணனாக வழங்கி வரும் இந்த உரிமைத் தொகையானது எனக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இது போன்ற எண்ணற்ற பெண்கள் நல திட்டங்களை செயல் படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமை யிலான அரசு பல்வேறு துறைகளில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக பெண்களுக்காக செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடனுதவிகள் மற்றும் தோழி விடுதிகள் ஆகியவற்றின் வாயிலாக பயனடைந்து வரும் பெண்கள் தமிழ்நாடு அரசுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தொகுப்பு:
க. சரவணன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருவண்ணாமலை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img