fbpx
Homeபிற செய்திகள்திராவிட மாடல் ஆட்சி தொடரும், மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக தொடர்வார் கோவையில் கனிமொழி எம்.பி. பேட்டி

திராவிட மாடல் ஆட்சி தொடரும், மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக தொடர்வார் கோவையில் கனிமொழி எம்.பி. பேட்டி

தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், ஸ்டாலின் தான் முதல்வராக தொடரு வார் என்று கோவையில் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
கோவை அடுத்த பல்லடத்தில் வருகின்ற திங்கட் கிழமை திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான ஏற்பாட்டு பணிகளை பார்வையிட திமுக மகளிர் அணி செயலாளரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான கனிமொழி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலை யத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

திமுக தேர்தல் அறிக்கை குழு நிர்வாகிகளிடம் கலந்து பேசி தேதி முடிவு செய்து விட்டு, கோவை யில் தொழில் துறை, விவ சாயிகள் என பல்வேறு மக்களின் கருத்துக்கள் கேட்கப்படும்.
இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும், என முதல்வர் கூறியிருக்கிறார். எனவே கோவையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்டறியப்படும்.
மக்களுடைய தேவை என்ன என்பதை கேட்டு தெரிந்து, எதை செய்ய முடியுமோ அதை தான் வாக்குறுதியாக கொடுப் போம். அதில் எண்ணிக்கை என்பதெல்லாம் கணக்கு கிடையாது.
யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு தெரியும். எங்களை பொறுத்தவரை நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக தொடர்வார்
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து தவெக உட்பட எதிர்கட்சிகள் விமர்சனங்கள் முன்வைத்து வரும் கருத்துக்கள் தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த அவர், அரசியல் காரணங்க ளுக்காக தேர்தல் நேரத்தில் பல பொய்யான விமர் சனங்களை சிலர் வைப் பார்கள், ஆனால் உண்மை என்ன என்பது இங்குள்ள நபர்களுக்கு தெரியும், இதற்கு மேல் விளக்கமளிக்க தேவையில்லை என்றார்.

படிக்க வேண்டும்

spot_img