சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவங்களை வழங்கி வரும் ஏர்பிஎன்பி தற்போது மும்பையில் உள்ள மகாலட்சுமி ரேஸ்கோர்சில் ஜனவரி 24, 25-ல் நடக்கும் சர்வதேச இசை கலைஞர்கள் பங்கேற்கும் ‘லோலாபலூசா இந்தியா 2026’ இசை நிகழ்ச்சியை காண சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கான முன் பதிவு துவங்கி உள்ள நிலையில், இதன் டிக்கெட் விலை ரூ.5850 ஆகும். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இது உறுதி செய்யப்படும். பார்வையாளர்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து மும்பைக்கும் அங்கிருந்து சொந்த ஊருக்கும் தங்கள் சொந்த செலவிலேயே வந்து போக வேண்டும்.
ஆக்கப்பூர்வமான அமர்வுகள் முதல், லோலாபலூசா இந்தியா ஒரு வித்தியாசமான தொகுப்பாளரால் தொகுத்து அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து ஏர்பிஎன்பி நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான தலைவர் அமன்ப்ரீத் பஜாஜ் கூறியதாவது: நேரடி இசை நிகழ்ச்சியும், பயணமும் எப்போதும் இணைந்தே இருக்கின்றன. மக்கள் விழாக்களில் மட்டும் கலந்து கொள்வதில்லை.
அவர்கள் தங்களுக்கு விருப்பமான நகரங்களை ஆராய்ந்து, அந்த இடங்களை சுற்றிப் பார்ப்பதோடு அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் அறிய விரும்புகிறார்கள்.
லோலாபலூசாவுடனான எங்கள் கூட்டணி என்பது, எங்களின் தனித்து வமிக்க ஏர்பிஎன்பி அனுபவங்கள் மூலம் ரசிகர்களை அந்த உலகத் திற்கு மேலும் நெருக்கமாகக் கொண்டுவருகிறது.
இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர், பாடலாசிரியர்கள், இசையமைப் பாளர்கள் மற்றும் கதைசொல்லிகளில் ஒருவரான அங்குர் திவாரியுடன் இணைந்து திரைக்குப் பின்னணியில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் பார்க்கும் வாய்ப்பும் வழங்குகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் இரட்டையர்களான ஓஏஎப்எப் மற்றும் சவேரா பங்கேற்கிறார்கள்.
இதேபோல் 25-ந்தேதி லோலாபலூசா இந்தியாவில் பங்கேற்கும் ராஷி சங்கவியுடன் இணைந்து, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சுவாரஸ்யமான நேரலை இசை நிகழ்வுகளில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறித்த ஒரு உள்விளக்கச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்“ என்றார்.



