பாரதி விழாவைக் கொண்டாடும் பொருட்டு நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை (அரசு உதவி பெறும் பிரிவு), சிந்தனைக் கவிஞர் கவிதாசன், வானொலி மாமணி ஜெ.கமலநாதன் அறக்கட்டளை இணைந்து முப்பெரும் விழாவினை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் அருட்சகோதரி முனைவர் மேரி பேபியோலா, முதல்வர் மற்றும் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ், செயலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் ப.மகேஸ்வரி (தமிழ்த்துறைத் தலைவர்) வரவேற்புரை நல்கினார்.

இதையொட்டி அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையேயான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. இளவல் திருவிழாவில் பாரதியின் பாடல்கள் இளையோ ருக்காகப் பாடப்பட்டவை / நடுத்தர வயதினருக்காகப் பாடப்பட்டவை / சமுதா யத்திற்காகப் பாடப்பட்டவை எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
இளநிலை முதலாண்டு வேதியியல் துறையில் பயிலும் மாணவி பாத்திமா, இளநிலை மூன்றாம் ஆண்டு கணிதம் பயிலும் மாணவி கு.ஜெனோவா ஆகியோர் பாரதியின் பாடல்கள் இளையோருக்காகப் பாடப் பட்டவை எனும் தலைப்பில் தம் வாதங்களை அரிவை எனும் அணியின் சார்பாக எடுத்துரைத்தனர்.
தெரிவை எனும் அணியின் சார்பாகத் தகவல் தொழில் நுட்பத்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் கு.சிந்தியா, இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் இரா.லீதியாள், பாரதியின் பாடல்கள் நடுத்தர வயதின ருக்காகப் பாடப்பட்டவை எனும் தலைப்பில் தம் வாதங்களைப் பட்டியலிட்டுப் பேசினர்.
பேரிளம் பெண் எனும் அணியின் சார்பாக வேதியியல் துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் ப. கலைவாணி, பொருளாதா ரத்துறை உதவிப்பேராசிரியர் காஞ்சனா, பாரதியின் பாடல்கள் சமுதாயத்திற்காகப் பாடப்பட்டவை எனும் தலைப்பில் தம் கருத்துகளை முன்வைத்துப் பேசினர்.

இந்நிகழ்ச்சியின் நடுவராக சிபி ஐஏஎஸ் அகாடெமியின் நிறுவனர் முனைவர் அரங்க கோபால் இருந்தார். பாரதியின் பாடல்கள் அனைத்துத் தரப்பினருக் காகவும் பாடப்பட்டவையே எனும் தீர்ப்பை வழங்கினார்
விழாவின் இறுதியில் தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் அருட்சகோதரி கிரேசி நன்றி நவின்றார்.
நிகழ்வில் 300 க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



